இன்றும் வெப்பமான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Friday, March 8th, 2019

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் இன்றைய தினமும் அதிக வெப்பத்துடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வெப்பமான வானிலையால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதனால், போதுமான அளவு நீரை பருகுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.

மேலும், பொதுவெளிகளில் கடின உழைப்பில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் இயன்றளவு நிழலான இடங்களை நாடுமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts: