இந்தியாவை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்!

Monday, July 3rd, 2017

சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 11 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

நேற்று இடம்பெற்ற அந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை பெற்றது

பதிலளித்த இந்திய அணி 49.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.ஏற்கனவே இடம்பெற்ற 3 போட்டிகளில் 2 இல் இந்திய அணி வெற்றி பெற்றதுடன், ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதுஇதன்படி, ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற ரீதியில் முன்னிலையில் உள்ளது.

Related posts: