இங்கிலாந்து அணிக்கு வெற்றி!

Saturday, February 15th, 2020

இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டு ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 204 ஓட்டங்களை பெற்று கொண்டது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக பென் ஸ்டொக்ஸ் ஆட்டமிழக்காது 47 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்கா அணி சார்பாக குயின்ட்ன் டி கொக் 65 ஓட்டங்ளை பெற்று கொடுத்தார்.

மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடரில் தலா இரண்டு அணிகளும் ஒவ்வொரு வெற்றிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: