ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு மாணவர்கள் பயணிக்க வேண்டும் – கூடுதலான மாணவர்களை ஏற்றிச்சென்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் எச்சரிக்கை!

Thursday, October 21st, 2021

மாணவர்களை ஏற்றிச்செல்லும் வான் மற்றும் முச்சக்கர வண்டிகளை பரிசோதிக்கும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி முச்சக்கரவண்டியில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும். இதேபோன்று வானில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பயணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்களை ஏற்றிச்செல்லும் வான் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.

அத்துடன் குறித்த வாகனங்களில் பயணிக்கும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருப்பது அவசியமாகும் என்பதுடன் இதன்போது சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: