அரசியலமைப்பு சபையின் இடைக்கால அறிக்கை 21 ஆம் திகதி!

Tuesday, September 19th, 2017

புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு உருவாக்க சபையின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

பலபிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.புதிய அரசியலமைப்பு உருவாக்க செயற்பாடுகளை வெளிப்படையாக மேற்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.இதனுடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக அவர் இதன்போது  மேலும் கூறியுள்ளார்.

Related posts: