அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்கள் குறைப்பு!

Sunday, October 22nd, 2017

அமைச்சர்கள் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் வெளிநாட்டு பயணங்கள் காரணமாக அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மாத்திரமல்லாது நாடாளுமன்றத்தின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதிலும் ஏற்படும் சிக்கலான நிலைமையை கவனத்தில் கொண்டு, வெளிநாட்டு பயணங்களை குறைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதியும் பிரதமரும் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்பு குறைந்து காணப்பட்டமை குறித்து ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் காரணமாக அமைச்சர்களுடன் அரசாங்கத்தின் முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடவும் தீர்மானங்களை எடுக்கவும் ஒதுக்கப்பட்டிருந்த தினங்களை கூட மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.புதிய அரசியலமைப்புச்சட்டம் சம்பந்தமாக விடயங்களை தெரிவிக்க பிரதமர் அண்மையில் நாடாளுமன்றத்தில் கூட்டி இருந்த விசேட கூட்டத்தில் சில அமைச்சர்கள் மாத்திரமே பங்கேற்றுள்ளனர்

Related posts: