அமெரிக்காவை தொடர்ந்து பிரித்தானியாவும்!

Thursday, March 23rd, 2017

 

துருக்கி, லெபனான், ஜோர்டான், எகிப்து, துனிஷியா மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு வரும் விமானங்களில், பயணிகள் தம்முடன் எடுத்துச் செல்லும் பைகளில் மடிக்கணினிகளுக்கு பிரித்தானியா அரசாங்கம் தடை விதித்துள்ளது. இந்த தடை டேப்லட் மற்றும் டிவிடி சாதனங்களுக்கும் பொருந்தும்.

முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று, எட்டு நாடுகளிலிருந்து நேரடியாக அமெரிக்கா வரும் விமானங்களில், பயணிகள் விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகளில் இம்மாதிரியான மின்னனு சாதனங்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. பயங்கரவாத குழுக்கள் விமான சேவைகளை குறிவைப்பதாகவும் மேலும் பயணிகளின் பைகளின் மூலம் விமானங்களில் வெடிப்பொருட்களை கடத்த முயற்சிப்பதாகவும் வந்த உளவுத் துறை தகவலை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் அறிவிப்பிற்கு பிறகு பிரிட்டனும் இம்மாதிரியான தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பிற்கு இந்த தடை அவசியம் என பிரிட்டன் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தடை 16செ.மீட்டர் அளவைக் காட்டிலும் பெரிதாகவும். 9.3 செ.மீ அளவைக் காட்டிலும் அகலமாகவும் அல்லது 1.5 செ.மீ அளவைக் காட்டிலுமகழமாகவும் இருக்கும் அனைத்து சாதனங்களுக்கும் பொருந்தும்.

Related posts: