அமரர் மாணிக்கம் கனகரத்தினத்தின் புகழுடல் தீயுடன் சங்கமம்!

Wednesday, November 15th, 2017

காலஞ்சென்ற அமரர் மாணிக்கம் கனகரத்தினத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரின் இறுதிக் கிரியைகளிலும் பங்கெடுத்தார்.

முன்பதாக யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றையதினம் சென்ற கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்  உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் புகழுடலுக்கு மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தினார்.

சமயக் கிரியைகளைத் தொர்ந்து அன்னாரது பூதவுடல் ஊர்தி பவனியாக யாழ்ப்பாணம் ஸரான்லி வீதியூடாக எடுத்துச் செல்லப்பட்டு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதன்பொது அங்கு இடம்பெற்ற சமயக் கிரியைகளைத் தொடர்ந்து தோழர் மூர்த்தியின் புகழுடல் தீயுடன் சங்கமமாகியது.

இந்நிகழ்வுகளில் கட்சினிய்  முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்பதாக அமரர் மாணிக்கம் கனகரத்தினத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் நேற்றையதினம் கட்சிக் கொடி போர்த்தி மலர்மாலை அணிவித்து  இறுதி அஞ்சலி செலுத்தினார்.

சுகயீனமுற்றிருந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த அமரர் கனகரத்தினம் கடந்த 12 ஆம் திகதி காலமானார்.

Related posts: