அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாது – அமைச்சர் உதய கம்மன்பில உறுதி!

அத்தியாவசிய சேவைகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாத வகையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அத்தியாவசிய சேவைகள், ஏற்றுமதி சார்ந்த தொழில்கள், வேளாண்மை மற்றும் மீன்வளத் தொழில் ஆகியவை பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் செயற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
முழு நாட்டிற்கும் ஒரே நேரத்தில் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, கொரோனா தொற்று எண்ணிக்கையை கருத்திற்கொண்டு கட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவை தொடர்பாக அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்த அமைச்சர் பயணக் கட்டுப்பாடுகள் குறித்த முடிவு அமைச்சரவையால் எடுக்கப்பட்டது என்றும் கொரோனா தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியால் அல்ல என்றும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|