அணு ஆயுத பரிசோதனையை நிறுத்த முடியாது- வட கொரியா!
Wednesday, August 23rd, 2017அமெரிக்காவும் தென் கொரியாவும் இராணுவ பயிற்சியினை நிறுத்தும் வரை வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனையை செய்து வரும் என அந்நாட்டின் தூதர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தென் கொரியாவில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ பயிற்சியை நிறுத்த வேண்டும் என வட கொரியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.இரு நாடுகளும் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுப்பட்டு வருவதால் கொரியா தீபகற்பத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவா நகரில் ஐ.நா சபை கூட்டம் இன்று நடந்துள்ளது. இக்கூட்டத்தில் வட கொரியா சார்பாக தூதரான Ju Yong-сhol பங்கேற்றுள்ளார்.
அப்போது, ‘அணு ஆயுத பரிசோதனையில் இருந்து வட கொரியா ஒருபோதும் பின் வாங்காது. அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளின் ராணுவ பயிற்சியானது ஏற்கனவே உள்ள போர் பதற்றத்தை அதிகரிக்கும்.மேலும், இரு நாடுகளும் இணைந்து வட கொரியாவிற்கு எதிராக ரகசிய போர் திட்டம் தீட்டி வருகின்றன.
இரு நாடுகளின் அத்துமீறலால் கொரியா தீபகற்பத்தில் அணு ஆயுத போர் எந்த நேரத்திலும் நிகழும் அபாயம் உள்ளது’ என Ju Yong-сhol எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
|
|