அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளூராட்சி தேர்தல்!

Thursday, July 14th, 2016

அடுத்த ஆண்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் சந்திமவீரக்கொடி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆண்டு ஆரம்பகால பகுதியில் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான நேர்முக பரீட்சைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களை எதிர்நோக்க சுதந்திரக் கட்சி ஆயத்தமாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்

Related posts: