| |
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச ஒலிம்பிக் 2008 போட்டிகளில் பத்தாம் நாளாகிய இன்று 37 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 65 பதக்கங்களை பெற்று சீனா முன்னணியில் உள்ள அதேவேளை, அமெரிக்கா 19 தங்கம் 22 வெள்ளி 25 வெண்கலம் உட்பட மொத்தம் 66 பதக்கங்களை வென்றெடுத்துள்ளது.
சற்று முன்னர் வரை கிடைக்கப்பெற்ற முடிவுகளின்படி சீனா 37 தங்கப் பதக்கங்களையும், அமெரிக்கா 19 தங்கங்களையும் பிரிட்டன் 12 தங்கங்களையும், அவுஸ்திரேலியா 11 தங்கங்களையும், ஜேர்மனி 9 தங்கங்களையும், கொரியா, ஜப்பான் ஆகியன தலா 8 தங்கங்களையும், ரஷ்யா 7 தங்கங்களையும், இத்தாலி 6 தங்கங்களையும், உக்ரேன் 5 தங்கங்களையும் பெற்றுள்ளன.
மேலும் பிரான்ஸ் ரொமேனியா ஆகிய நாடுகள் தலா 4 தங்கங்களையும், நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் தலா 3 தங்கங்களையும் வென்றெடுத்துள்ளதுடன் மேலும் 10 நாடுகள் தலா 2 தங்கங்களையும், இந்தியா உள்ளிட்ட 15 நாடுகள் தலா ஒரு தங்கத்தையும் வென்றுள்ளன.
இதுவரை இடம்பெற்ற போட்டிகளில் 276 வீரர்களும், 254 வீராங்கனைகளும், தங்கம், வெள்ளி, வெண்கலம் என மொத்தம் 548 பதக்கங்களை வென்றெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
|