23.08.2008 - சனிக்கிழமை
கால் பந்தாட்டப் போட்டியில் மானிப்பாய் கல்லூரியும், வலைப்பந்தில் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியும் சம்பியன்களாகியுள்ளன. வவுனியாவில் நடைபெறுகின்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டத்திலான விளையாட்டுப் போட்டிகளில் கால் பந்தாட்டத்தில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரி சம்பியனாகியுள்ளது.
இரண்டாமிடத்தை மன்னார் சென் சேவியர் ஆண்கள் கல்லூரியும், மூன்றாமிடத்தை வவுனியா பூவரசங்குளம் மகாவித்தியாலயமும் பெற்றுள்ளன. இதே போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பிரிவில் மன்னார் சென் சேவியர் ஆண்கள் பாடசாலை சம்பியனாகியுள்ளது.
இரண்டாமிடத்தை யாழ்ப்பாணம் அருணோதயா கல்லூரியும், மூன்றாமிடத்தை மன்னார் சென் லூசியா பாடசாலையும் பெற்றிருக்கின்றன. வலைப்பந்து போட்டிகளில்; 15 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி சம்பியனாகியுள்ளது.
இரண்டாமிடத்தை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மாகவித்தியாலயமும் மூன்றாமிடத்தை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியும் வென்றிருக்கின்றன. 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி சம்பியனாகியுள்ளது. இரண்டாமிடத்தை வடமராட்சி இந்துக் கல்லூரியும், மூன்றாமிடத்தை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியும் வென்றிருக்கின்றன.
19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி சம்பியனாகியுள்ளது. இரண்டாமிடத்தை யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரியும், மூன்றாமிடத்தை மன்னார் சித்திவிநாயகர் கல்லூரியும் பெற்றிருக்கின்றன |