Home English Tamil
     
   
 
 ஓமந்தையில் புலிகளின் தளம் மீது விமானத் தாக்குதல்
 

21.08.2008 - வியாழன்

வவுனியாவிலுள்ள ஓமந்தையில் புலி உறுப்பினர்கள் ஒன்றுகூடும் தளத்தின் மீது இன்று காலை விமானப் படையினர் தாக்குதல் நடாத்தியுள்ளதாகத் தேசியப் பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இன்று காலை 6.30 மணியளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும், ஓமந்தையிலிருந்து ஏழு கிலோ மீற்றர் வடமேற்குப் பிரதேசத்திலுள்ள புலி உறுப்பினர்கள் ஒன்றுகூடும் தளத்தின் மீது விமானப் படையின் எம்.ஐ.-24 ரக கெலிஹொப்டர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும், விமானப் படையினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தாக்குதல் மிகவெற்றிகரமாக அமைந்திருந்ததாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.