Home English Tamil
     
   
 
 ஊ.சே.நிதி மற்றும் ஊ.ந.நிதி என்பனவற்றின் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
 09.03.2010 - செவ்வாய்க்கிழமை

ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றை பெறுவதற்கான  நடைமுறை மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் பயனாளிகள் ஓய்வுபெற்றதன் பின்னர் தமது வைப்புக்களை உடனடியாக பெறும் நோக்கில் தொழில் அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும் இணைந்து புதிய நடைமுறையினை அமுல்படுத்தவுள்ளன. இதற்கமைய பொதுவான கணிணி தரவகம் ஒன்றினை ஸ்தாபிக்க இரு அமைப்புக்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தொழில் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். இந்த தரவகத்தின் மூலம் முழுமைப்படுத்தியதும் மிகவும் சரியானதுமான உறுப்பினர்களின் தொகையினை இலகுவாக வெளிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனூடாக பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை அவர்கள் ஓய்வு பெற்று ஒருசில நாட்களுள் பெறக்கூடியதாக இருக்கும் எனவும் இதன்மூலம் வெளி மாவட்ட உறுப்பினர்கள் சிரமமின்றி தமது கொடுப்பனவுகளை பெறமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.