Home English Tamil
     
   
 
 புலிகளின் ஜீவன் தளம் படையினர் வசம்
 

முல்லைத்தீவு மாவட்டத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்திருந்த புலிகளின் ஜீவன் பேஸ் எனப்படும் முக்கிய தளம் ஒன்றை இராணுவத்தின் 59 ஆம் படைப்பிரிவு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை 4.30 மணியளவில் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாயாறு குடாக்கடலுக்குத் தெற்கே உள்ள ஆண்டான்குளம் பகுதியில் அமைந்திருந்ததாகவும் புலிகளின் பிரசித்தி பெற்ற தளமாகிய வன்போர் பேஸ் எனப்படும் முகாமின் முக்கிய பகுதிகளில் ஜீவன் பேஸும் ஒன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள மேற்படி தளத்தில் 1250 சதுர பரப்பளவு கொண்ட நான்கு கட்டிடங்களும் 100 பதுங்கு குழிகளும் 35 கழிப்பறைகளும் இருப்பதாகவும் இந்தப் பகுதியில் உயிரிழந்த புலிகள் 69 பேரின் கல்லறைகள் காணப்பட்டதாகவும் வெற்று பரல்கள் ஒரு தொகுதி உட்பட பல பொருட்களையும் இராணுவத்தினர் மீட்டிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.