Home English Tamil
     
   
 
 சரத் பொன்சேகா கைது.
 08.02.2010 - திங்கட்கிழமை
 
முன்னாள் ராணுவ தளபதியும் எதிரணியின் ஜனாதிபதி பொது வேட்பாளருமாகிய ஜெனரல் சரத் பொன்சேகா இன்று மாலை ராணுவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ள ராணுவப்பேச்சாளர் பிரசாத் சமரசிங்க ராணுவ சதிக்குற்றச்சாட்டின் பேரிலேயே சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதேவேளை அரச தொலைக்காட்சிக்கு சற்று முன்னர் தகவல் தெரிவித்த பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் குலுகல்ல ஜனாதிபதி மீதான கொலை முயற்சிக்காகவும் ராணுவ ரகசியங்களை வெளியிட்டமைக்காகவும் சரத்பொன்சேகா ராணுவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.