 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | சம்பூர் அனல் மின்நிலைய நிர்மாணப் பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பம். |
| | | 08.02.2010 - திங்கட்கிழமை
இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கைகளின் மூலம் திட்டமிடப்பட்டுள்ள உத்தேச சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்தின் நிர்மாண பணிகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் நிர்மாண நடவடிக்கைள் எதிர்வரும் 2013ம் ஆண்டு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த அனல் மின்நிலையம் ஊடாக ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என மின்சக்தி வலுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை சீன நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட நுரைச்சோலை மின் நிலைய உற்பத்தி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நுரைச்சோலை மற்றும் சம்பூர் மின் நிலையங்களின் ஊடாக 2013ம் ஆண்டு முதல் இலங்கையின் தேசிய மின் உற்பத்தியுடன் மேலதிகமாக ஆயிரத்து 900 மெகாவாட் மின்சாரத்தை இணைக்கமுடியும் எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |