Home English Tamil
     
   
 
 பல்கலைக்கழகங்களின் அனைத்து பீடங்களையும் ஒரே தினத்தில் ஆரம்பிக்க முடிவு.
 08.02.2010 - திங்கட்கிழமை 

பல்கலைக் கழகங்களில் காணப்படும் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளையும் ஒரே தினத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.
 
இதற்கு அமைய பேராதனை பல்கலைக் கழகத்தின் அனைத்து பீடங்களின் ஆரம்ப தினம் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு ஏனைய பல்கலைக் கழகங்களில் ஒரே நாளில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா? என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது எனத் தெரிவித்த அவர் எப்படியிருப்பினும் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். முன்னர் 1987 மற்றும் 1989ஆம் ஆண்டு  காலப்பகுதிகளில் காணப்பட்ட குழப்பமான சூழ்நிலை காரணமாக பீடங்களின் அட்டவணைகளில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.