Home English Tamil
     
   
 
 ரஷ்ய செஞ்சதுக்கத்திற்கு ஜனாதிபதி விஜயம்.
 08.02.2010 - திங்கட்கிழமை 

இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதன் பின்னர் தனது உத்தியோகபூர்வமான முதல் விஜயமாக ரஷ்யா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செஞ்சதுக்கத்தை சென்று பார்வையிட்டுள்ளார்.

ரஷ்ய புரட்சியின் பின்னர் உழைப்பாளிகளின் வெற்றியை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செஞ்சதுக்கத்திற்கு சென்ற ஜனாதிபதி ரஷ்யாவின் முன்னாள் தலைவர் வீ ஐ லெனினின் நினைவுத் தூபிக்கு சென்று வணக்கம் செலுத்தினார். அங்கு பல்வேறு பிரசித்தி பெற்ற இடங்களை சென்று பார்வையிட்ட ஜனாதிபதி பெட்ரிக் லல்லும் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
















 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.