Home English Tamil
     
   
 
 கண்டியில் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படுகின்றன.
 08.02.2010 - திங்கட்கிழமை 

சுதந்திர தினத்தை முன்னிட்டும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின்பொருட்டும் கண்டி பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த 14 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சேவையில் ஈடுப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான இருப்பிட வசதிகள் வழங்கும் பொருட்டு கண்டி பிரதேசத்தில் உள்ள 53 பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. மேற்படி பாதுகாப்பு தரப்பினர் தங்கியிருந்த 14 பாடசலைகள் மீண்டும் கையளிக்கப்பட்ட நிலையில் குறித்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. இதனிடையே மூடப்பட்ட எஞ்சிய பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளதாக மத்திய மாகாணசபை கல்வி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.