Home English Tamil
     
   
 
 சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளனர்.
 08.02.2010 - திங்கட்கிழமை
 
இலங்கையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகளை கறுப்புப் பட்டியல் இடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
 
இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜைகள் மீண்டும் நாட்டிற்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகளை கறுப்புப் பட்டியலிடுவது தொடர்பாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு திருகோணமலை கல்முனை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுப் பிரஜைகள் தங்கியிருப்பதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு பிரஜைகளில் சிலர் பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் இவ்வாறு கைது செய்யப்படும் நபர்கள் மீளவும் இலங்கைக்குள் பிரவேசிக்காத முறையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.