Home English Tamil
     
   
 
 யாழ். முனியப்பர் ஆலயப் பகுதியில் நடைபாதை வியாபாரத்திற்கு இட ஒதுக்கீடு. மாநகர முதல்வர் அறிவிப்பு.
 08.02.2010 - திங்கட்கிழமை
 
யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலயப் பகுதியில் நடைபாதை வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அறிவித்துள்ளார்.
 
யாழ். நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய இடங்களைத் தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் யாழ். மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. இக்கூட்டத்தின் பிரகாரம் கடந்த 28 ஆம் திகதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஆறு அங்கத்தவர்களைக் கொண்ட உபகுழு நியமிக்கப்பட்டு அக்குழு சிபார்சு செய்ததன்படி முனியப்பர் கோவில் பக்கமாகவுள்ள இடத்திலிருந்து யாழ். பிரதம தபாலகத்திற்கு எதிர்ப்பக்கமாகவுள்ள பகுதிகள் வரை நடைபாதை வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
இப்பகுதியில் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஒருவருக்கு 10 தர 10 சதுரஅடி இடம் மட்டும் ஒதுக்கப்படும். இதற்கென நாள் ஒன்றுக்கு தினமும் குத்தகையாக 100 ரூபாய் அறவிடப்படுவதுடன் ஆயிரம் ரூபாவை பாதுகாப்பு வைப்பில் இடவேண்டும். வியாபாரி ஒருவர் 3 நாட்களுக்கு வியாபாரத்தில் ஈடுபடவில்லை என்றால் அவ்விடத்தை வேறு ஒருவருக்கு வழங்கப்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வீதியின் மத்திய பகுதியில் இருந்து 50 அடிக்கு மேற்பட்ட பகுதியில் மட்டுமே வியாபாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வியாபாரம் மேற்கொள்ளபவர் மாநகரசபையின் அனுமதி பெற்றே வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் இக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.