Home English Tamil
     
   
 
 அவுஸ்திரேலியாவிலுள்ள இந்தியர்கள் ஏழைகள் போல காட்சியளிக்க வேண்டும் என்ற கூற்றினால் பலத்த சர்ச்சை.
 08.02.2010 - திங்கட்கிழமை

அவுஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் ஏழைகள் போல் காட்சி அளிக்க வேண்டும் என விக்டோரிய மாகாண அரசாங்கம் வெளியிட்டிருந்த கோரிக்கை தொடர்பில் பலத்த சர்ச்சைகள் எழுந்துள்ளன.

அவுஸ்திரேலியாவில் அதிகரித்த அளவில் இந்தியர்கள் தாக்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகிறது. இது இன ரீதியான தாக்குதல் என கருத்துக்கள் வெளிவந்த நிலையில் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிவதால்தான் இந்தியர்கள் தாக்கப்பட்டு கொள்ளையிடப்படுவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியர்கள் ஏழைகள் போல காட்டியளிக்கும் பட்சத்தில் அவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என விக்டோரியா மாநில அரசாங்கம் கருத்து வெளியிட்டிருந்தது.

மேற்படி கருத்து தொடர்பாக இந்தியர்கள் கொதிப்படைந்துள்ளதுடன் பல்வேறு சர்ச்சைகளும் கண்டனங்களும் எழுந்துள்ளன. இந்த நிலையில் தாம் வெளியிட்ட கருத்துக்கு மாற்று கருத்து கற்பிக்கப்படுவதாக விக்டோரியா மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது. உண்மையில் விலையுயர்ந்த ஆபரணங்களை மறைத்து வைக்குமாறே தாம் இந்திய மக்களை கோரியதாக அரசாங்கம் தற்போது தெரிவித்துள்ளது.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.