Home English Tamil
     
   
 
 அவுஸ்திரேலிய கடற்பிராந்தியத்தில் மற்றுமோர் சட்டவிரோத குடியேற்றப்படகு.
 08.02.2010 - திங்கட்கிழமை

அரசியல் புகலிடம் கோரும் நோக்கில் அவுஸ்திரேலிய கடற்பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்த இலங்கை அகதிகளைக் கொண்ட படகொன்று கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அதனை மீட்க அவுஸ்திரேலிய கடற்படைக்கப்பலொன்று சென்றுள்ளதாக அவுஸ்திரேலியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் புகலிடம் கோரும் 45 இலங்கைத் தமிழர்கள் பயணம் செய்த படகு கிறிஸ்மஸ் தீவிலிருந்த தென்மேற்காக 90 கிலோமீற்றருக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. அகதிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மனிதாபிமான அமைப்பொன்றுக்கு அகதிப் படகில் இருந்து கிடைத்த அவசர கையடக்கதொலைபேசி அறிவித்தலை அடுத்தே அகதிகள் தற்சமயம் மீட்கப்பட்டுள்ளனர்.

ஆரம்ப விசாரணைகள் மூலம் மேற்படி படகு இலங்கையிலிருந்து நேரடியாக அவுஸ்திரேலிய கடற்பரப்பிற்கு வந்த நிலையில் எரிபொருள் மற்றும் உணவு அற்ற நிலையில் கடந்த 5 நாட்களாக அவர்கள் சிரமத்தை எதிர்நோக்கியதாக தெரியவந்துள்ளது. மீட்கப்பட்டவர்களில் பலரது உடல் நிலை மிக மோசமாக உள்ளதாக தொண்டர் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மீட்கப்பட்ட இலங்கை அகதிகள் குறித்து எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.