Home English Tamil
     
   
 
 சுகாதார ஊழியர்கள் எதிகாலத்தில் தபால் மூலம் வாக்களிக்க நடவடிக்கை.
 08.02.2010 - திங்கட்கிழமை

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் சுகாதார ஊழியர்கள் அனைவரும் எதிர்காலத்தில்  தமது வாக்குகளை தபால் மூலம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுகாதார ஊழியர்கள் வாக்களிப்பதற்கான பிரேரணையை சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரவையில் முன்வைத்ததுடன் அமைச்சரவையின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள சகல அரசாங்க வைத்தியசாலைகளிலும் கடமையாற்றும் சகல தரத்திலுள்ள ஊழியர்களுக்கும் இச்சலுகை வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஜனாதிபதித் தேர்தல் பொதுத் தேர்தல் மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்கள் ஆகியவற்றில் அவர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களின் போது பெரும்பான்மையான சுகாதார ஊழியர்கள் வாக்களிப்பில் ஈடுபடவில்லை என்ற விடயம் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்தே சுகாதார அமைச்சர் மேற்கண்ட நடவடிக்கையினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.