Home English Tamil
     
   
 
 சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
 


21.08.2008 - வியாழன்

வலிகாமம் மேற்கு பிரதேச செயலர் பிரிவில் சட்டவிரோதமாக மண் அகழ்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வலிகாமம் மேற்கு பதில் பிரதேச செயலர் திருமதி ரூபினி வரதலிங்கம் தெரிவித்துள்ளார். பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலேயே இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார். இது தொடாபாக அவர் மேலும் தெரிவிக்கையில் வயல் நிலங்களிலும் குளங்களிலும் மண் அகழ்வோர் தமது கிராம விவசாய சம்மேளனங்களுடாக கமநல பெரும்பாக உத்தியோகத்தரின் அனுமதியைப் பெறவேண்டும் என்றும் கடல் நீர் உட்புகும் அபாயம் உள்ளதால் தரவைக் காணிகளிலும், தரிசு நிலங்களிலும் மண் அகழ்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.