 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | பிரபாகரனின் மறைவிடம் மீது விமானப் படை எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் - விமானப் படைத் தளபதி |
| | |
19.08.2008
எந்தவொரு தருனத்திலும் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்கியுள்ள முக்கிய தளத்தின் மீது விமானப் படையினர் தாக்குதல் நடத்தக் கூடும் என விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தரைப்படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இத்தாக்குதல்கள் காரணமாக சிவிலியன்களுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாகப் பயங்கரவாதிகள் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். ஆனால், சிவிலியன்களுக்கு இழப்புக்கள் ஏற்படாமல் விமானப் படையினர் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
எமது விமானப் படைக்குப் பலமான பாதுகாப்பு வலையமைப்பு இருக்கிறது. புலிகளின் தாக்குதல்களைத் தடுப்பதற்குப் போதுமான பலமும் விமானப் படையினரிடம் இருக்கிறது. புதிய யுத்த ஜெட் விமானங்களை உபயோகிக்கவும் விமானப் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகளை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் விமானப் படைத்தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |