 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | பாகிஸ்தானில் 30 நாட்களில் ஜனாதிபதித் தேர்தல் |
| | |
பாகிஸ்தான் ஜனாதிபதி பதவியில் இருந்து பர்வேஸ் முஷாரப் விலகியதை அடுத்து 30 நாட்களில் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இந்த பதவிக்கு முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவர் சர்தாரிக்கும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) தலைவர் நவாஸ் ஷெரீப்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்து வந்த முஷாரப் மீது அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவர ஆளும் கூட்டணி நடவடிக்கை மேற்கொண்டதை அடுத்து நேற்று ஜனாதிபதி பதவியை முஷாரப் ராஜினாமா செய்தார். முஷாரப் இவ்வாறு அறிவித்தது மக்களாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று ஆளும் கூட்டணி கூறியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இக்கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முஷாரப் பதவி விலகியதை அடுத்து இடைக்கால ஜனாதிபதியாக செனட் சபை தலைவர் முகமது மியான் சூம்ரு பொறுப்பேற்றுள்ளார். பாகிஸ்தான் அரசியல் சாசனத்தின்படி புதிய ஜனாதிபதி 30 நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 04 மாகாண சபை உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பார்கள்.
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |