Home English Tamil
     
   
 
 இந்திய எல்லைக்குள் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் கைது
 


இந்திய கடல் எல்லையினுள் நுழைந்து மீன் பிடித்ததாக இலங்கையைச் சேர்ந்த ஏழு மீனவர்கள் சென்னை அருகே நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
 
இது குறித்து தமிழக அரசு மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து அதனடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழகத்திற்கு இடையே சென்னைக்கு அருகே அமைந்துள்ள வைசாக்பூர் என்ற இடத்தில் நேற்றிரவு படகுகளுடன் ஏழு மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அதன்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர், சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என்பதும் இந்திய கடல் எல்லைக்குள் அவர்கள் மீன் பிடித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்றிரவு பிடிபட்ட அவர்கள் ஏழு பேரையும் இந்தியக் கடலோரக் காவல் படையினர் சென்னை காசிமேடு துறைமுக பொலிசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் தமிழக அரசு மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகம் ஆகியோரிடம் இது பற்றி தெரிவித்து அவர்களின் உத்தரவுக்கு இணங்க இந்த விடயத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.