Home English Tamil
     
   
 
 வறுமையின் கொடுமையால் இரயிலில் பாய்ந்து யுவதி தற்கொலை
 

 

குடும்பத்தின் வறுமை காரணமாக தலவாக்கலைப் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் யுவதி ஒருவர் இரயிலில் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்த யுவதி தலவாக்கலை சென்கிளயர் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. இந்த பரிதாப சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அட்டன் சிங்கமலை இரயில் சுரங்கத்தில் இந்த யுவதியின் உடல் அட்டன் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் தனது குடும்ப வறுமை நிலை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும் தனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லையென கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

 



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.