யாழ் மாவட்ட விவசாய அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஒருபகுதியாக பழப்பயிர்ச் செய்கையினை மேம்படுத்தும் நோக்கில் விவசாய உபகரணங்களை கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ளது.
யாழ் விவசாயத் திணைக்கள பிரதி விவசாய விரிவாக்கல் பணிப்பாளர் தெரிவித்துள்ள தகவல்களின்படி 45 கத்தரிக்கும் வாள்களும், 36 கத்தரிக்கும் உபகரணங்களும், மாதிரி கத்தரிக்கும் உபகரணங்கள் இரண்டும் உடனடி தேவையாக உள்ளன.
தற்போதைய போக்குவரத்துச் சீரின்மை காரணமாக மேற்படி பழப்பயிர் அறுவடை உபகரணங்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக தெரியப்படுத்திய யாழ் பழச்செய்கை விவசாயிகள் அவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
பழப்பயிர்ச் செய்கை மேம்பாட்டிலும் அதனை மேற்கொள்ளும் விவசாயிகளினது கோரிக்கையின் பேரிலும் அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அவற்றைப் பெற்றுக் கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
|