Home English Tamil
     
   
 
 குடாநாட்டில் மின் மாற்றிகளுக்கு பாதுகாப்பு
 

யாழ்.குடாநாட்லுள்ள மின்மாற்றிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்குடன் மின்மாற்றி அமைந்திருக்கும் இடங்களைச் சுற்றி காப்பரண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

பொது இடங்கள், வீதிகள் மற்றும் சந்திகளில் அமைந்திருக்கும் மின்மாற்றிகளில் சில அண்மைக்காலமாக புலிகளினால்; சேதப்படுத்தப்பட்டு வந்ததையடுத்தே படையினர் இந்நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இம் மின்மாற்றிகளுக்கு காப்பரண்களை அமைப்பதற்காக இராணுவத்தினரும் அப்பிரதேச இளைஞர்களும் இணைந்து இவ்வரண்களை அமைப்பதில் ஈடுபட்டு வருகின்றனர். புலிகள் மின் மாற்றிகளைச் சேதப்படுத்துவதால் பொதுமக்களுக்கு மின்சார விநியோகம் தடைப்படுகிறது. அத்துடன் தற்போது கல்விப் பொதுத் தராதர (உயர் தர) பரீட்சைகள் நடைபெற்று வருவதால் பரீட்சார்த்திகள் (மாணவ மாணவியர்) மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.