Home English Tamil
     
   
 
 பொதுநலவாய நாடுகளின் தேர்தல் செயலக பிரதிநிதிகள் - ஐ.ம.சு.மு வேட்பாளர்கள் சந்திப்பு
 05.08.2013 - திங்கட்கிழமை

பொதுநலவாய நாடுகளின் தேர்தல் செயலக பிரதிநிதிகள் வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர  முன்னணி வேட்பாளர்களுடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

மேற்படி சந்திப்பு யாழ். கீறின் கிறாஸ் ஹோட்டேலில் நேற்று நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பங்கெடுக்கும் பங்காளிக் கட்சியான ஈ.பி.டி.பியின் முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசா கருத்துத் தெரிவிக்கையில் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தல் நீதியாகவும். நியாயமாகவும், உண்மையாகவும் நடைபெறவேண்டுமெனவும் அதற்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தயாகராகயிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது 2004 ஆம் ஆண்டுக்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளது என சுட்டிக்காட்டிய அவர், 2009 இற்குப் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல், உள்ளுராட்சி தேர்தல், ஆகியன நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெற்றன. இதற்கு தேர்தல் கண்காணிப்புக்குழுவின் அறிக்கை சான்று பகிர்கின்றன.

நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதே தமது விருப்பமெனத் தெரிவித்த அவர் அதற்குத் தாம் முழுமையான பங்களிப்பை வழங்கத் தயார் என்றும் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் நடவடிக்கையின் போது பிரச்சார நடவடிக்கை, வாக்குப் பெட்டி எண்ணும் இடம், வாக்களிக்கும் முறைமைகள் பற்றி வேட்பாளர்கள் பொதுநலவாய தேர்தல் செயலக பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தனர்.

இந்த சந்திப்பில் பொதுநலவாய நாடுகளின் ஜனநாயக விடயங்களுக்கான தலைமை ஆலோசகர் மார்டின் கெசிர்ய (Martin Kasirye) மற்றும் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான செயலாளர் அமனா ஜடடோய் (Amna Jatoi) ஆகியோருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த, ஐ.ம.சு.முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஈ.பி.டி.பி வேட்பாளர்களான சுந்தரம் டிவகலாலா, கோடிஸ்வரன் றுசாங்கன், ஞானசக்தி சீறிதரன் உட்பட ஏனைய வேட்பாளர்களும் உடனிருந்தனர்.







 
     
 
15A, Layards Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2503467 Fax: 94 11 2585255
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.