Home English Tamil
     
   
 
 இலவச பரீட்சை வழிகாட்டி வினாத்தாள்கள் வறியமாணவர்களின் கல்வி அடைவுமட்டத்தை மேம்படுத்தும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்
 18.06.2013 - செவ்வாய்க்கிழமை

வறிய மாணவர்களின் கல்வி அடைவுமட்டத்தை மேம்படுத்தும் நோக்குடனேயே இலவச பரீட்சை வழிகாட்டி வினாத்தாள்களை நாம் விநியோகித்து வருகின்றோம் எனவே தொடர்ந்தும் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைக்கும் அவை கிரமமாக அனுப்பிவைக்கப்படும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த (15) கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடும்;போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்;,  கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் எழுபது விகிதத்திற்கும் மேற்பட்டமக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள். அக்குடும்பங்களைச்சேர்ந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை வழிகாட்டி வினாத்தாள்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலைகாணப்பட்டது. எனவே அம்மாணவர்களும் ஏனைய மாணவர்களுடன் ஒப்பிடுமளவுக்கு  கல்வித்தரத்தில் மேம்படவேண்டும் என்ற நோக்குடனும் அவர்களும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப்பெற்று சித்தி எய்தவேண்டும் என்ற எண்ணத்துடனுமே நாம் கிளிநொச்சிமாவட்ட கல்வி அபிவிருத்தி குழுவினூடாக தரம் ஐந்து வழிகாட்டி வினாத்தாள்களை இலவசமாக விநிநோகித்து வருகின்றறோம்;.

ஏனெனில் மாணவர்களை தரம் ஐந்திலிருந்தே கல்வித்தரம்மிக்கவர்களாக தயார்படுத்துகின்ற சந்தர்ப்பத்திலேயே எதிர்காலத்தில் உயர்வான அடைவுமட்டங்களை எட்டமுடியும் என்ற நோக்கிலேயே நாம் இவ்வாறான  செயற்பாடுகளில் அதிக கரிசனை காட்டிவருகின்றோம். அத்தோடு கல்விப்புலத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் முயற்சியுமே உயர்பெறுபேறுகளை பெறுவதற்கு மாணவர்களை ஊக்குவிக்கும் என்பதை இறுதியாக வெளியான க.பொ.த சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் உணர்த்தியுள்ளன. இதேவேளை இன்று பெற்றோர்களும்  பிள்ளைகளின் கல்விமேம்பாட்டில் அதிக அக்கறை காட்டத் தொடங்கியுள்ளனர் அதிகரித்துவரும் பெறுபேறுகளின் உயர்விற்கு பெற்றோர்களின் அதிக முயற்சியும் முக்கியகாரணமாக அமைந்துள்ளது.

இதேவேளை இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு போதுமான ஆசிரியர்வளம் காணப்படுகின்றது, அத்தோடு எதிர்காலத்தில் ஆசிரியர்வளம்  மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. இதேவேளை அம்மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதிலும் இவ் ஆசிரியர்கள் அதிக கவனமெடுத்து வருகின்றனர். யாழ்மாவட்டம் போன்ற நீண்ட தொலைவிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதந்து மிகப்பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களும் இவ்விடயத்தில் அதிக ஆர்வம்காட்டுகின்றமை மிகுந்த வரவேற்புக்குரியது.

இருப்பினும் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து பாடசாலைகளும் இவ்விடயத்தில் அக்கறைசெலுத்த வேண்டும்.  ஒரு சில பாடசாலைகளேனும் இவ்விலக்கிலிருந்து விலகமுற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மாவட்ட அமைவுமட்டம் பின்னடைவை எதிர்கொள்வதற்கான வாய்ப்புக்களே உருவாகும். கடந்தவருடம் வெளியான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளினடிப்படையில் மாவட்டத்தில் முப்பது விகிதமான மாணவர்களே அடைவுமட்டத்தை எட்டியிருந்தனர் ஆனால் இவ்வருடம் எழுபது விகிதமான மாணவர்கள் சித்தி எய்த வேண்டும் என நாம் எதிரபார்க்கின்றோம். அதற்கமைவாக தொடர்ந்தும் எம்மால் விநியோகிக்கப்படும் பீட்சை வழிகாட்டிவினாத்தாழ்கள் வழங்கப்படும்  அதேவேளை மாவட்டத்தின் அனைத்துபாடசாலைக்கும் அவை கிரமமாக அனுப்பிவைக்கப்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் கிளிநொச்சிவலயக் கல்விப் பணிமனையின் ஆரம்பப்பரிவு உதவிக்கல்விப்பணிப்பாளர் கணேசலிங்கம், ஈபிடிபியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் மாவட்டத்தில் இணங்கும் பாடசாலைகளில் தரம் ஐந்து வகுப்பிற்கு கல்விகற்பிக்கும் ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.








 
     
 
15A, Layards Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2503467 Fax: 94 11 2585255
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.