 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | புங்குடுதீவு றோ.க.த.க வித்தியாலய கட்டுமானப் பணிகளுக்காக விரைவில நிதி
ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமல்
உறுதியளிப்பு |
| | | 06.03.2013 - புதன்கிழமை
புங்குடுதீவு றோ.க.த.க வித்தியாலயத்தின் புதிய வகுப்பறை கட்டட தொகுதிகளின் கட்டுமானப் பணிகளுக்காக விரைவில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கபூர்வமான பணிகளை பெற்றோர் மற்றும் ஆசிரியர்களே முன்னெடுப்பதுடன்,பெற்றோர் தமது பிள்ளைகளை சகல துறைகளிலும் ஆளுமைப் பண்புடையவர்களாக கடடியெழுப்ப வேண்டும். இப் பிரதேசம் கஷ்டப்பிரதேசம் எனக் கருதாது இங்குள்ள வளங்களை சரியான வகையில் பயன்படுத்தி உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை வளமுடையதாக்கி கொள்ளவேண்டும்.
கடந்த இரு தினங்களிற்கு முன் யாழ் மாவட்டத்தில் இடம் பெற்ற கல்விக்குழு மாநாட்டில் வடமாகாணத்தில் நிலவிவரும் கல்விச் செயற்பாட்டிற்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்ப்பட உள்ளதால் சகல பாடசாலைகளும் இத்திட்டத்தின் மூலம் அபிவிருத்தி அடையும்.
விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம் மாணவர்கள் உடல் உளரீதியாக வளர்ச்சியடைவதுடன் அவ்உளத்தூண்டல்களால் கல்வியிலும் மேம்பாடடைய முடியும். இதனை கருத்தில் கொண்டே பாடசாலைகளில் இணைப்பாடவிதானம் கல்வித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீவக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான பணிகளை தொடர்ந்தும் சிறந்த முறையில் முன்னெடுத்து தீவக மாணவர்களின் வளமான எதிர்கால வாழ்வுக்காக உழைக்கும் எனத் தெரிவித்தார்;.
தொடர்ந்து, பல்வேறு போட்டி நிகழ்வுகளுடன், இடைவேளை நிகழ்வாக மாணவர்களின் இசையும் அசைவும் இடம்பெற்றது.
அடுத்து போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய அணிகளிற்கான வெற்றிக்கேடயங்களையும், வீரவீராங்கணைகளிற்கான வெற்றிக் கிண்ணங்களையும், சான்றிதழ்களையும் மாவட்ட அமைப்பாளர் கமல் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் வழங்கிவைத்தனர்.
இந் நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் புங்குடுதீவு இணைப்பாளர் ஜயாக்கிளி சிவனேசன்(நவம்) வேலணை கோட்ட ஆரம்பக் கல்வி உதவிப்; பணிப்பாளர் தனிநாயகம,; அயற்பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள்;, பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






 |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |