 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | மக்கள் மின்சார வளங்களை சரியானவகையில்; பயன்படுத்த வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமல் |
| | | 06.03.2013 - புதன்கிழமை
மின்னிணைப்பை பெற்றுக் கொள்ளும் மக்கள் தங்களது பிள்ளைகளின் கல்விவளர்ச்சிக்காகவும் கைத்தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும் மின்சார வளங்களை சரியானவகையில்; பயன்படுத்த வேண்டும் என ஈ.பி.டி.பியின் யாழ்மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (06) காரைநகர் மருதபுர பிரதேசத்துக்கான மின் வழங்கலை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த காலங்களில்; நாம் எட்ட முடியாது அடைய முடியாது என எண்ணிய பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் இன்று சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் மீள்குடியமர்ந்துள்ளதுடன், மீள்குடியேறப்பட்டுள்ள மக்களுக்கான இலவச மின் இணைப்பு அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு மின்னிணைப்பை பெற்றுக் கொள்ளும் மக்கள் தங்களது பிள்ளைகளின் கல்விவளர்ச்சிக்காகவும் கைத்தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும் மின்சார வளங்களை சரியானவகையில்; பயன்படுத்த வேண்டும். மகிந்தசிந்தனை வேலைத்திட்டத்தின் மூலம் வடக்கின் வசந்தம் என்ற கருத்திட்டத்தினூடு வடமாகாணத்தில் அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்; நிகழ்வில் இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் ஞானகணேசன், காரைநகர் பிரதேச செயலர் திருமதி பாபு, ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச இணைப்பாளரும், காரைநகர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான வீ.கண்ணன்(றஜனி), பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பிரதேச மக்கள் எனப்; பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





 |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |