 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | மதவாச்சி மடு வரையான புகையிரத மார்க்கம் திறக்கப்படவுள்ளது |
| | | 06.03.2013 - புதன்கிழமை
மதவாச்சியிலிருந்து மடு வரையான புகையிரத மார்க்கத்தை அடுத்த மாதம் மீண்டும் திறக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
யுத்த காலத்தில் சேதமடைந்த இந்த ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் ஜீ.டபிள்யு.எஸ். சிசிர குமார தெரிவித்துள்ளார். தலைமன்னார் ரயில் மார்க்கத்தின் மதவாச்சியிலிருந்து மடு வரையான மார்க்கம் கடந்த 30 வருடங்களாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய கடனுதவியின் கீழ் தற்போது இந்த ரயில் மார்க்கம் புனரமைக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டது. இதன் நிர்மானப் பணிகளுக்காக 81.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக ரயில்வே வணிக அத்தியட்சகர் சுட்டிக்காட்டினார்.
ஏப்ரல் மாத இறுதியில் இந்த ரயில் மார்க்கத்தை போக்குவரத்திற்காக திறக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |