Home English Tamil
     
   
 
 உல்லாசப் பிரயாணத்துறையை  ஊக்குவிக்கும் நோக்கில் கடற்கரைப் பிரதேசங்களைத் தூய்மைப்படுத்த நடவடிக்கை!
 05.03.2013- செவ்வாய்க்கிழமை

இலங்கையில் உல்லாசப் பிரயாணத்துறையை  ஊக்குவிக்கும் நோக்கில் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் பயன்படுத்தும் கடற்கரைப் பிரதேசங்களைத் தூய்மைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு - இலங்கை உல்லாசப்பயண அபிவிருத்தி சபை மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் என்பன இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதன் முதற்கட்டமாக ஹிக்கடுவை மற்றும் அம்பலாங்கொடைப் பிரதேசத்தில் 4 கிலோ மீற்றர் தூரம் கொண்ட கடற்கரையை மாசு படுத்தும் சட்டவிரோ கட்டடங்கள் அகற்றப்பட்டு சுற்றாடலைத் தூய்மைப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் உள்ள 1300 மைல் நீள கடற்கரைப் பிரதேசம் உல்லாசப் பிரயாணிகளைக் கவர்ந்துள்ளது. 80 சதவீத உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல்கள் இந்த கடற்கரைப் பிரதேசங்களிலே அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.