 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம், மூன்றாம் கட்ட மின் உற்பத்தி பணி ஆரம்பம்! |
| | | 05.03.2013 - செவ்வாய்க்கிழமை
நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட மின் உற்பத்தியை இவ்வருடம் ஆரம்பிக்குமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி விடுத்த கோரிக்கைக்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று மின்சக்தி எரிசக்தி அமைச்சில் நடைபெற்றது. இதில் இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ.ஜியான்ஹாவோ கலந்துகொண்டார்.
இக்கலந்துரையாடலில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் உள்ள நீண்டகால நல்லுறவை நினைவுபடுத்திய சீனத் தூதுவர் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்றார்.
மேலும் 600 மெகா வோட் மின்சாரம் இவ்வருடத்தில் உற்பத்தி செய்ய துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |