Home English Tamil
     
   
 
 மனநோய் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் செயற்திட்டம் ஆரம்பம் - சுகாதார அமைச்சு
 05.03.2013 - செவ்வாய்க்கிழமை

மனநோய் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார அமைச்சின் மனநோய் பிரிவினரால் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மனநோயின் அறிகுறிகள், மனநோய்க்காக சிகிச்சை பெறும் இடங்கள் மற்றும் மனநோய் ஏற்படுவதற்கான பிரதான காரணங்கள் குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்படவுள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் உலக மக்களில் அதிகமானோர் மனநோயினால் பாதிக்கப்படுவர் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.