 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | கல்வி ஊடாகவே உயர்ந்த பண்பாடுடைய சமுதாயத்தை உருவாக்க முடியும் -- நல்லூர் பிரதேச சபை எதிர்க்கட்சித்தலைவர் |
| | | 05.03.2013 - செவ்வாய்க்கிழமை
வறுமைக் கோட்டுக்குட்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச இணைப்பாளரும், நல்லூர் பிரதேசசபையின் எதிhக்கட்சித்தலைவருமான அம்பலம் இரவீந்திரதாசன் அவர்கள் வழங்கி வைத்தார்.
கோண்டாவில் சி.சி.ரி.எம் பாடசாலையில் அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 120 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த நல்லூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், சிறந்த கல்வி ஊடாக எதிர்காலத்தில் ஓங்கி உயர்ந்த பண்பாடுடைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனவும் அதற்காக தான் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் செயற்பட்டு வருவதாகவும், இப்பாடசாலையின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் சிவசிதம்பரம், நல்லூர் கோட்ட கல்விப்பணிப்பாளர் சி.மாணிக்கராஜா, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர் கழக செயலாளர் ம.ஜெயந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


 |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |