 |
|
| |
|
|
| |
|
|
| |
| | | யாழ்ப்பாணத்தில் இந்திய கல்விக் கண்காட்சி இன்று ஆரம்பம்! |
| | | 05.03.2013 - செவ்வாய்க்கிழமை
இந்திய கல்விக் கண்காட்சி - 2013 இன்றும், நாளையும் யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இன்று 10.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரையும், நாளை காலை 10.30 தொடக்கம் பிற்பகல் 12.00 மணிவரையும் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில், 100ற்கும் மேற்பட்ட கல்லூரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 30ற்கும் மேற்பட்டட இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்ளவுள்ளன.
இதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்லூரிகள், சந்தைப்படுத்தல் மற்றும் முகாமைத்துவக் கல்வி நிறுவனங்கள், ஹொட்டேல் முகாமை, சுற்றுலா கல்வி நிலையங்கள், விமானப் போக்குவரத்துத்துறை கல்வி நிறுவனங்கள், நிதி மற்றும் வங்கித் தொழில் கல்வி நிலையங்கள், நுண்கலை, நவநாகரிக கலை பாடசாலைகள், மருத்துவ மற்றும் தாதியல் கல்வி நிறுவனங்கள், உள்ளக வடிவமைப்பு மற்றும் கட்டடக் கலை நிலையங்கள் உட்பட பல்வேறு துறைசார் கல்வி நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளன.
இந்தக் கண்காட்சியானது உயர்தரம் மற்றும் சாதாரணதரம் சித்தியடைந்த மாணவர்கள் தமது உயர்கல்வியை திட்டமிடுவதற்கும் பொருத்தமான கல்வி வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கண்காட்சிக்கான அனுமதிகள் இலவசம் எனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். |
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |