seksseksseksadult
Home English Tamil
     
   
 
 வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே தாழமுக்கம் வடக்கு, கிழக்கில் மழை
 05.03.2013 - செவ்வாய்க்கிழமை

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே நிலை கொண்டிருக்கும் தாழமுக்கம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் அதிக மழை பெய்வதற்கான அறிகுறிகள் உள்ளதென வானிலை அவதான நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு, வடமத்தி, ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் கடும் மழையை எதிர்பார்க்க முடியுமென அவ்வதிகாரி கூறினார். உருவாகியிருக்கும் தாழமுக்கம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை பெய்யுமெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் நிலவிவரும் வடக்கு, கிழக்கு பருவப் பெயர்ச்சி காரணமாக நண்பகல் அல்லது மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புண்டு என தெரிவித்துள்ள அதேவேளை மின்னல் தாக்கங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும் வானிலை அவதான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.


 
     
 
15A, Layards Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2503467 Fax: 94 11 2585255
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.