Home English Tamil
     
   
 
 யாழ் மாவட்டத்தில் சீமெந்து விநியோகம் துரிதமாக இடம்பெறுகின்றது.
 

யாழ் மாவட்ட பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் வேண்டுகோளை அடுத்து சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியின் பேரில் யாழ் மாவட்டத்திற்கு 40 ஆயிரம் சீமெந்து பக்கற்றுக்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

‘மேர்க்ஸ் றுகுணு’ கப்பல் மூலம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள மேற்படி சீமெந்தானது 1600 ரூபா வீதம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் சமாச நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி சீமெந்து விநியோகமானது வீடுகளைக் கட்டி சீமெந்து தட்டுப்பாடினால் அதனை ப+ர்த்தி செய்யமுடியாமல் உள்ளவர்களுக்கும், சொந்த வீடுகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளோருக்கும், தன்னார்வத்தொண்டு அமைப்புக்கள் வீட்டுத்திட்டத்திற்கென வழங்கிய நிதி உதவியின் கீழ் வீட்டினை கட்டி முடிக்க உள்ளோருக்கும் முன்னுரிமை என்ற ரீதியில் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தேவைகளுக்கு சீமெந்து தேவைப்படும் பொதுமக்கள் தத்தமது பகுதி கிராம உத்தியோகத்தர்களினால்  பெற்;றுக்கொள்ளப்பட்ட சிபார்சுடன் பிரதேச செயலாளர் ஃ  உதவி அரசாங்க அதிபர் ஆகியோரின் உறுதிப்படுத்தலுடன் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் சீமெந்தினை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் முதற்கட்டமாக சீமெந்து தேவைப்படும் ஒருவர் ஆகக்கூடியது 20 பைக்கற் சீமெந்தினை பெற்றுக்கொள்ள இயலும் எனவும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் சமாச நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

தற்போது சீமெந்து விநியோகம் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலமையில் வேலையற்றிருந்த கட்டட தொழிலாளர்கள் வருமானம் பெறக்கூடியதாக இருப்பதுடன் யாழ் மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணப் பணிகளும் ஆரம்பிக்கப்படுகின்றமை விஷேட அம்சமாகும்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.