Home English Tamil
     
   
 
 யாழ் கூட்டுறவுச் சங்கங்களுக்கு 150 மில்லியன் ரூபா நிதியுதவி
 

வடமாகாண விஷேட செயலணித்தலைவரும் சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் யாழ் குடாநாட்டில் கோதுமை மா சீனி பால்மா போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக யாழ் கூட்டுறவுச் சங்கங்களுக்கு 150 மில்லியன் ரூபாவினை கடனாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

யாழ் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கள் தமக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு போதுமான நிதி இல்லாத நிலைமையினை ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். இவ்விடயத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவுக் கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து 150 மில்லியன் ரூபாவினை கடனாக வழங்குவதற்கு திறைசேரி முடிவு செய்துள்ளது

யாழ் மாவட்ட பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் அரிசி சினி பால்மா கோதுமைமா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை அசாதரணமான சூழ்நிலைகளிலும் இக்கட்டான நாட்களிலும் தட்டுப்பாடின்றி நியாயமான விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவதன் அடிப்படையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வேண்டுகோளின் பேரில் இந்நிதி உதவி செய்யப்படுவது மற்றுமோர் விடயமாகும்.



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.