மன்னார்
இலுப்பைக்கடவை பிரதேசம் பாதுகாப்புப்படையினர் வசம்
மன்னார் இலுப்பைக்கடவை பிரதேசத்தினை
பாதுகாப்புப் படையினர் இன்று மேற்கொண்ட படை நடவடிக்கையினை
அடுத்து கைப்பற்றியுள்ளனர்.
விடத்தல் தீவுப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினரே 10
கிலோமீற்றர் வடக்காக முன்னேறி இலுப்பைக்கடவையினை முழுமையாக
கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளதாக தெரியவருகின்றது.
மன்னாரில் புலிகளின் ஆக்கிரமிப்பு பிரதேசங்களை நோக்கிய
முன்னகர்வு முயற்சியினை மேற்கொண்டு வரும் இராணுவத்தின் 58
ஆம் இலக்கப் படையணியினராலேயே இலுப்பைக்கடவை முழுவதும்
கைப்பற்றப்பட்டது.
கடந்த 16ஆம் திகதி படையினரால் கைப்பற்றப்பட்ட விடத்தல்
தீவுப் பகுதியிலிருந்து முன்னகர்ந்த படையினர் விடத்தல்
தீவுக்கு வடக்கில் 10 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள
இலுப்பைக்கடவையினைக் கைப்பற்றும் முயற்சியில்
ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் முழுவதும் மேற்கொண்ட
முன்னகர்வு முயற்சியின் பயனாகவே அப்பகுதி முழுவதும் இன்று
காலை கைப்பற்றப்பட்டது.
கடந்த 21 வருட காலமாக புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ்
இருந்த இந்தப்பகுதி கடற்புலிகளின் படையெடுப்பு
நடவடிக்கைகளுக்கான பிரதான நகராகக் காணப்பட்டது. தற்போது
இலுப்பைக்கடவை பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர்
அங்கிருந்து சுமார் 2 கிலோமீற்றர் முன்னோக்கி
நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. -K
பொங்கு தமிழ் கூத்து
நடாத்தியோரின் ஒரு சதம்கூட இடம்பெயர்ந்தவர்களுக்கு
கிடைக்கவில்லை. அரசாங்கம் மட்டுமே நிவாரணம் வழங்குகின்றது.
மன்னார் வடக்கு மற்றும் முல்லைத்தீவுப்
பகுதிகளிலிருந்து புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக
தொடர்ச்சியாக பெருமளவூ மக்கள் கிளிநொச்சி நோக்கி
வருவதாகவூம் அந்த மக்கள் எத்தகைய அடிப்படை வசதிகளுமின்றி
அல்லற்படுவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மற்றும் முல்லைத்தீவூப் பகுதிகளிலிருந்து கடந்த
பத்து நாட்களில் அரசகட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி செல்ல
முற்பட்ட 1500 குடும்பங்கள் புலிகளால் அச்சுறுத்தப்பட்டு
பூநகாp உதவி அரசாங்க அதிபா பிரிவிலுள்ள
முழங்காவில் வன்னரிக்குளம் மற்றும் அக்கராயன் உள்ளிட்ட பகுதிகளில்
தங்கியூள்ளதாகவும் அம்மக்களுக்கு நிவாரணமாக அரிசி மட்டுமே
உலக உணவூத்திட்டத்தினால் வழங்கப்பட்டு வருவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய உணவுப் பொருட்கள்
வழங்கப்படாத நிலையில் அவாகள் பெரும் கஷ்டத்தின் மத்தியில்
மரங்களின் கீழே வாழ்ந்து வருவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அகதிகளுக்கு நிவாரணமாக வழங்கும் பொருட்டு உலக
உணவுத்திட்டத்தினால் சேமித்து வைக்கப்பட்டிருந்த அரிசி
உட்படப் பெருமளவூ உலருணவூப் பொருட்களை புலிகள் எடுத்துச்
சென்றுள்ளதால் தற்போது அகதிகளுக்கு அரச அதிகாரிகளால் அரிசி
மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை பாதிக்கப்பட்ட
மக்களுக்கு
குடிசை மற்றும் மலசலகூட வசதிகளை ஏற்படுத்திக்
கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டு கிளிநொச்சி
மாவட்ட அரசாங்க அதிபா; நாகலிங்கம் தேவநாயகம் அரசாங்கத்துடன்
தொடர்பு கொண்டுள்ளதாகவும் செய்திகள்
தெரிவிக்கின்றன.
அத்துடன இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும்
பொருட்டு மீள் குடியேற்ற அமைச்சு நிதியொதுக்கீடு
செய்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம்
தேவநாயகம்
தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பொங்குதமிழ் என்ற பேரில் கூத்து
நடாத்தியோரின்
ஒரு சதம் காசு கூட இடம்பெயர்ந்து அல்லல்படும் மக்களுக்கு
கிடைக்கவில்லை என்பது பலரினாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொங்கு தமிழானது புலிகளின் நலனுக்காகவே அன்றி தமிழ் பேசும்
மக்களின் நலனுக்காக அல்ல என்பதே இதிலிருந்து
உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -K
விடத்தல்தீவை கைப்பற்றியமை மிகப்பெரிய வெற்றி.
மன்னாரிலுள்ள விடத்தல்தீவைப் புலிகளிடமிருந்து
படையினர் கைப்பற்றியது மிகப்
பெரிய வெற்றியென இராணுவத் தளபதி
லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா
தெரிவித்துள்ளார்.
மேற்குக் கரையோரத்தில் படையினாpடம் தமது முக்கிய தளத்தைப்
புலிகள் இழந்துள்ளமை படையினருக்குக் கிடைத்த மிக முக்கிய
வெற்றியாகும்
என்றும் மன்னாரில் மோதல்கள் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் போது விடத்தல்தீவூப் பகுதியில் அவர்கள் தமது
நிலைகளை
வலுப்படுத்தியிருந்ததால் விடத்தல்தீவைத் தாங்கள்
இழப்போம் எனப் புலிகள் ஒருபோதும் கருதியிருக்கவில்லை என
இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
தெரிவித்துள்ளார்.
மன்னாhpன் நெல்வயல் களஞ்சியப் பகுதியை இரு வாரங்களுக்கு
முன் படையினர் கைப்பற்றிய நிலையில் விடத்தல்தீவையூம் தாங்கள்
இழப்போம் எனப் புலிகள் நினைத்துப் பார்க்கவில்லை
என்றும் மன்னார் வளைகுடாவில் புலிகளின் கடற் பிhpவினாpன்
நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக விடத்தல்தீவிற்கு
வடக்கேயூள்ள இலுப்பைக்கடவைப் பகுதியை நோக்கித் தற்போது
படையினர் முன்னேறி வருவதாகவூம் இராணுவத் தளபதி
தெரிவித்துள்ளார்.
விடத்தல்தீவையூம் இலுப்பைக்கடவையையூம் கைப்பற்றுவது
மன்னாரிலிருந்து செயற்படும் கடற்படையினருக்கு பெரும்
உதவியாக இருக்கும்
எனவூம் இதனால் புலிகள் விடத்தல்தீவை
இழந்துள்ளமை அவர்களுக்குப் பெரும் பின்னடைவாகும் எனத்
தொpவித்துள்ள இராணுவத்
தளபதி இலுப்பைக்கடவையையூம்
படையினர்
கைப்பற்றி விட்டால் வடக்கே மன்னாhpன் எல்லையிலுள்ள
வெள்ளாங்குளத்தை நோக்கிப்
படையினர் முன்னேற முடியூம் எனவூம்
தெரிவித்துள்ளர் -K
கிழக்கு மாகாண இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு
கிழக்கு மாகாணத்திலுள்ள இளைஞர்களுக்கு வெளிநாட்டு
வேலை வாய்ப்பைப் பெற்;றுக் கொடுப்பதற்;கு அரசாங்கம்
நடவடிக்கை எடுத்து வருவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர்களுக்கு
வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காக இளைஞர்கள்
தொpவூ செய்யப்பட்டு
வருவதுடன் மட்டக்களப்பு மாவட்ட
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்
அமைப்பாளர் ரவ+ப் ஏ மஜீத்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம்
விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய நாட்டில் வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்காக
இளைஞர்கள் தொpவூ செய்யப்பட்டு
வருவதாகவூம் 18 வயதிற்கும்
39 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களே தொpவூ
செய்யப்படுவதாகவூம் அவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு
நிலையத்தினால் நான்கு மாதத் தொழில் பயிற்சிகள் இலங்கையில்
வழங்கப்பட்ட பின்னரே கொரிய நாட்டிற்கு அனுப்பி
வைக்கப்படவூள்ளதாகவூம்
தெரிவிக்கப்பட்டுள்ளது. -K
புலிகளுக்கெதிரான படை நடவடிக்கை இரண்டு வருடங்களுக்குள்
நிறைவூ பெற்றுவிடும். - இராணுவத் தளபதி
பாதுகாப்புப்
படையினருக்கும் புலிகளுக்குமிடையே
தற்போது நடைபெற்று வரும் யூத்தத்தை இரண்டு வருடங்களுக்;குள்
முடிவிற்குக் கொண்டு வர முடியூம் எனத் தாம் எதிர்பார்ப்பதாக
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா
தெரிவித்துள்ளார்.
கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்து
உரையாடிய
பின்னர் கருத்துத் தொpவித்த இராணுவத்
தளபதி
நிலப்பரப்பைக் கைப்பற்றுவது மாத்திரம் அரசாங்கத்தின்
நோக்கமல்ல எனத்
தொpவித்துள்ளதுடன் ஜனநாயகத்தை ஸ்தாபித்து
மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான செயற்பாடுகளை
முன்னெடுப்பதாகவூம்
தெரிவித்துள்ளார்.
புலிகளின் மூன்றில் இரண்டு வீதப் பலத்தைப்
படையினர் தற்போது
குறைத்துள்ளதாகத் தொpவித்துள்ள இராணுவத் தளபதி சரத்
பொன்சேகா அரச கட்டுப்பாடற்ற பிரதேசத்தில்
சுமார் 2 லட்சம்
மக்கள் மாத்திரமே உள்ளதாகவூம்
தெரிவித்துள்ளார்.
இதேவேளை படையினாpன் அடுத்த இலக்குக் கிளிநொச்சியைக்
கைப்பற்றுவதாகும் என நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான
பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தொpவித்துள்ளார் -K
மக்களின் நலன்களைக் கருத்திற் கொண்டு சார்க் மாநாட்டு
ஏற்பாடுகள்
சார்க் மாநாட்டை முன்னிட்டு ஏற்கனவே
மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மக்களின் நலன்களைக்
கருத்திற் கொண்டு மாற்றியமைத்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் ரஞ்ஜித் குணசேகர
தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்க எதிர்வரும் 30ம் திகதி முதல் 04
உயர் பாதுகாப்பு
வலயங்கள்
ஏற்படுத்தப்படவூள்ளதுடன் கட்டுநாயக்க விமான
நிலையம் பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் மற்றும்
அதனைச் சுற்றியூள்ள பல
வீதிகளும் கடற்படை மற்றும் பொலிஸ்
தலைமையகப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகள் அதி
உயர் பாதுகாப்பு
வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பிரதேசங்களுக்குள் உட்பிரவேசிக்கும் போது அனுமதிப்
பத்திரம் பெறுவதில் சிக்கல்கள் காணப்படுவதால்
அப்பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கும்
சமயம் குறிப்பிட்ட
நிறுவனங்கள் வழங்கியூள்ள அடையாள
அட்டைகள் அனுமதிப்
பத்திரமாகக் கருதப்படும் எனத் தொpவித்துள்ள பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் ரஞ்ஜித்
குணசேகர ஏனையோர் அதியூயர் பாதுகாப்பு வலயப்
பிரதேசங்களுக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்
என்றும் காலியிலிருந்து வரும் அனைத்து ரயில்களும்
பம்பலப்பிட்டியில்
நிறுத்தப்படுவதுடன் கண்டி மற்றும் ஏனைய
பிரதேசங்களிலிருந்து வரும் ரயில்கள் மருதானையில்
நிறுத்தப்படவூள்ளதாகவூம்
தெரிவித்ள்ளார் -K
அமைச்சர் கெஹெலிய வீட்டை படமெடுத்த
நபர் கைது
கண்டியிலுள்ள தேசியப் பாதுகாப்பு அமைச்சின்
பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெலவின் வீட்டை
டிஜிட்டல் கமரா மூலம் வீடியோப் படம் எடுத்த
இளைஞர் ஒருவரைக்
கண்டிப்
பொலிசார் கைது செய்து தடுத்து வைத்து விசாரித்து
வருகின்றனர்.
கடந்த 15ம் திகதி பகல்
இளைஞர் ஒருவர் அமைச்சாpன் வீட்டை
வீடியோப் படம் எடுப்பதாகப் பொலிசாருக்குக் கிடைத்த
தகவலையடுத்து அங்கு விரைந்து சென்ற
பொலிசார் அந்த இளைஞரைக்
கமராவூடன் கைது செய்து விசாரணை
மேற்கொண்டனர். அந்த இளைஞர்
கண்டியின் பிரதான வங்கி ஒன்றில் கணனிப் பிரிவூ ஊழியராகக்
கடமையாற்றுவதாகவூம் அவர் தமது டிஜிட்டல் கமராவின் மூலம்
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவின் வீட்டை முழுமையாகப் படம்
எடுத்திருப்பது பொலிசாரின் சோதனையின் மூலம்
கண்டறியப்பட்டுள்ளதாகவூம் இதனால் அந்த இளைஞரைத் தொடர்ந்தும்
தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவூம்
தெரிவிக்கப்பட்டுள்ளது. -K
அரசாங்க ஊழியர்களின் வாழ்க்கைச் செலவூ கொடுப்பனவூ மேலும்
ஆயிரம் ரூபாவினால் அதிகரிப்பு.
அரசாங்க ஊழியர்களின் வாழ்க்கைச் செலவூக்
கொடுப்பனவை மேலும் ஆயிரம் ரூபாவினால் அதிகாpப்பதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியூள்ளதாகவூம் இதற்கான
பிரேரணையை நிதி மற்றும் திட்டமிடல்
அமைச்சர் என்ற வகையில்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்திருந்ததாகவூம்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அரச
சேவை மாகாண அரச
சேவை அரச
கூட்டுத்தாபனம் மற்றும் நிலையியற் சபை ஆகியவற்றின்
ஊழியர்களது சம்பளத்தை ஆயிரம் ரூபாவினால் அதிகாpப்பதற்கு
அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தச் சம்பள
அதிகாpப்பின்படி 22 ஆயிரத்து 935 ரூபாவை விடக் குறைந்த
சம்பளம் பெறும் அரச ஊழியர்கள் மாகாண அரச ஊழியர்கள் மற்றும்
இராணுவ வீரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 2500 ரூபா
வாழ்க்கைச் செலவூக்
கொடுப்பனவை 2008 ஜுலை முதலாம் திகதி
முதல் அமுலுக்கு வரும் வகையில் 3500 ரூபாவாக
அதிகாpப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
-K
துணுக்காய் பிரதேசம் விரைவில்
படையினர் வசம்
அரச கட்டுப்பாடற்ற பகுதியான முல்லைத்தீவூ
மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தினைக் கைப்பற்றும் நிலையை
இராணுவத்தினர் அண்மித்துள்ளதாகத் தேசியப் பாதுகாப்பிற்கான
ஊடக மத்திய நிலையம்
தெரிவித்துள்ளது.
மல்லாவி மற்றும் துணுக்காய் பிரதேசங்களைக் கைப்பற்றும்
நடவடிக்கைகளில்
இராணுவத்தினர் தற்போது
ஈடுபட்டுள்ளதாகவூம்
இராணுவத்தின் 56வது படைப்
பிhpவினர் முன்னேறித் தாக்குதல்
மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவூம் ஊடக மத்திய
நிலையம்
தெரிவித்துள்ளது.
இதேவேளை துணுக்காய்க்கு அப்பாலுள்ள புலிகளின் முக்கிய
நிலையம் ஒன்றினுள் தரைமார்க்கமாக
இராணுவத்தினர் உட்பிரவேசித்துள்ளதாகவூம் இன்னமும் ஓhpரு தினங்களில்
படையினர் இவ்விரு பகுதிகளையூம் கைப்பற்றிவிடுவார்கள் என்ற
நம்பிக்கை தமக்கு இருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட்
ஜெனரல் சரத் பொன்சேகா
தெரிவித்துள்ளார்.
இப்பகுதிகளைக் கைப்பற்றியதின்
பின்னர் புலிகளின் முக்கிய
தளமாகக் கருதப்படும் கிளிநொச்சியைத் தாக்குவதற்கு
இராணுவத்தினருக்கு இலகுவாக இருக்கும் எனத் தொpவித்துள்ள
இராணுவத்
தளபதி மணலாறு முன்னரங்கிலிருந்து
இராணுவத்தினர்
முல்லைத்தீவை நோக்கி முன்னேறிச்
சென்று தற்போது
குமுளமுனையில் படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவூம்
தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் இரண்டாவது படைப் பிhpவினரும் ஏ-9 வீதி
இணைந்ததாக முன்னேறிச் செல்வதாகவூம் இராணுவத் தளபதி
லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா மேலும்
தெரிவித்துள்ளார் -K
யாழில் மரக்கறி விலை வீழ்ச்சி. விவசாயிகள் பாதிப்பு.
குடாநாட்டில் மரக்கறி வகைகளின் விலைகள் திடீரென
வீழ்ச்சியடைந்துள்ளன. இதனை அடுத்து விவசாயிகள் அவற்றை
சந்தைப்படுத்த முடியாது கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்த
வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
கத்தரிக்காய் பயிரிடப்பட்ட விவசாயிகளே பெரிதும்
பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். கத்தரிக்காய்
யாழ் சந்தைகளில் கிலோ 5 ரூபா முதல் 12 ரூபா வரை
விற்கப்படுகின்றது. இவ்வாறு திடீரென விலை
வீழ்ச்சியடைந்ததால் கத்தரிக்காய்களை சந்தைப்படுத்த முடியாது
விவசாயிகள் அவற்றை தமது வளர்ப்பு கால்நடைகளின்
தீவனத்திற்குப் பயன்படுத்தி வருவதாகப் பாதிக்கப்பட்ட
விவசாயிகள்
தெரிவிக்கின்றனர். இதேபோன்று வேறு சில
மரக்கறிகளும் சந்தைப்படுத்த முடியாது கால்நடைகளுக்குத்
தீவனமாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கவலை
தெரிவிக்கின்றனர்.
ஒரேயடியாக ஏராளமான விவசாயிகள் குறிப்பிட்ட மரக்கறி வகைகளை
விளைவிப்பதும் பின்னH நஷ்டம் எனக்கூறி விளைவிக்காமல்
விடும்போது அதே மரக்கறிகள் யானை விலை குதிரை விலை விற்பதும்
யாழ் மாவட்டத்தில் காலாதிகாலமாக இடம்பெற்றுவரும்
நிகழ்வூகளாகும். தற்போது உருவாக்கப்ட்டுள்ள யாழ் தேசவள
விவசாயிகள் சம்மேளனம் இவ்விடயத்தில் உரிய ஒருங்கிணைப்பினை
ஏற்படுத்தி விளைபொருட்கள் சீராகவூம் நியாயமான விலையிலும்
கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டுமென அனைவரும் எதிர்பார்க்கின்றனர்
-K
News Flash 19.07.2008
நெல்சன்
மண்டேலாவிற்கு 90...!
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன்
மண்டேலா தனது 90வது பிறந்த நாளை வெள்ளியன்று கொண்டாடினார்.
தென்னாப்பிரிக்காவின் தென் கிழக்கே உள்ள குனு என்ற தனது
சொந்த கிராமத்தில் தனது குடும்பத்தினர் மற்றும்
உறவினர்களுடன் மண்டேலா பிறந்தநாளை கொண்டாடினார். இதனால்
அந்த கிராமம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவை அதன் இனவெறி ஆட்சியிலிருந்து ஜனநாயக
ஆட்சிக்கு கொண்டுவந்த வரலாற்று சிறப்புக்கு சொந்தக்காரரான
மண்டேலா, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பே முழுநேர
அரசியலில் இருந்து விலகிவிட்டிருந்தார். நெல்சன்
மண்டேலாவின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த சில
நாட்களாகவே வாழ்த்துச் செய்திகள் வந்துக் குவிந்த வண்ணம்
உள்ளன. தவிர இதனை ஒட்டி பலவித நிகழ்ச்சிகளும் நடந்திருந்தன.
சென்ற மாதம் லண்டனில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு இசை
நிகழ்ச்சிகூட மண்டேலாவின் பிறந்தநாள் கொண்டாட்டமாகத்தான்
அமைந்திருந்தது. தென்னாப்பிரிக்காவில் அவரது பிறந்த நாள்
நினைவு நாணயமும் தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளன.
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா இன்று
தனது 90வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவர்
பிறந்த கிராமத்தில் உற்சாகமான கொண்டாட்டங்கள்
நடைபெறுகின்றன.
தென்னாப்பிரிக்க தலைவரான மண்டேலா இன வேறுபாட்டுக்கு எதிராக
நடத்திய போராட்டத்திற்காக 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை
அனுபவித்தவர். கடந்த 1990ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட அவர்,
கடந்த 94ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று
தென்னாப்பிரிக்க அதிபராக பதவி வகித்தார். பதவிக்காலம்
முடிவடைந்த பின்னர் ஏழ்மை, கல்லாமை மற்றும் எய்ட்ஸ்
ஆகியவற்றுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். - R
எம்மை தாக்கும் வரை காத்திருக்க முடியாது - சந்திரசிறி...!
புலிகள் எம்மை தாக்கும் வரை காத்திருக்க
முடியாது. அதனால்தான், கடந்த தடவைகளில் நாம் தாக்குதல்களை
மேற்கொண்டோம். அந்தவகையில், எமக்கு பின்னடைவே இல்லை என
யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி
தெரிவித்துள்ளார்.
தென்பகுதியிலிருந்து யாழ்.குடாநாட்டுக்கு வந்த சிங்கள
ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்
மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்;,
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எமக்கு
பின்னடைவுகளை தரவில்லை. எதிரிக்கு பாரிய இழப்புகளை
ஏற்படுத்தியுள்ள அதேவேளை, எமக்கு கள உத்தியின் அடிப்படையில்
பல பயன்களை தந்துள்ளது. இந்த நடவடிக்கைகளில் இராணுவத்தை
விட புலிகளுக்கே அதிக இழப்பு ஏற்பட்டது. களநிலைமைகளை
பொறுத்துத்தான் ஆனையிறவை நோக்கிய தமது அடுத்து நடவடிக்கை
அமையும். வலிந்த தாக்குதல்களில் நாம் பாரிய வெற்றிகளை
ஈட்டிவருகின்றோம். சிறப்புப் படையணியினரை தேவைக்கேற்றவாறு
பயன்படுத்தி அவர்களின் உச்சவளத்தை பெற்றுக் கொள்கின்றோம்.
யாழ்ப்பாணம் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள். 2005ம் ஆண்டு
இருந்ததை விட நிலைமை இப்போது எவ்வளவோ முன்னேற்றமடைந்துள்ளது.
புலிகள் மிகமிக குறைந்த அளவு ஐம்பதிற்கும் குறைவான
எண்ணிக்கையான புலிகளே இப்போது குடாநாட்டில் உள்ளார்கள்
என்றும் தெரிவித்துள்ளார். - R
அரச கரும மொழி நடைமுறையில் இல்லை என்பதே யதார்த்தம் -
சகவாழ்வு மன்றம்...!
தற்போது, இலங்கையில் தமிழ் ஒரு அரச கரும
மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது நடைமுறையில்
இல்லை என்பதே யதார்த்தம். எனவே சகல மட்டங்களிலும் தமிழையும்
ஒரு அரச கரும மொழியாக பயன்படுத்துவது அவசியமான ஒரு விடயம்
இதனை நடைமுறைப்படுத்தவே 1997ம் ஆண்டு அரச கரும மொழிகள்
ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டது. சகல அரச திணைக்களங்களிலும்
தமிழை செயல்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றியும்
ஆராயப்பட்டது என சகவாழ்வு மன்ற மொழித் திட்டமிடல்
இணைப்பாளர் எம்.முத்துக்குமார் தெரிவித்தார்.
புத்தளம் சகவாழ்வு மன்றத்தின் அரச மொழிக்கொள்கை மற்றும்
மொழியுரிமை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த வாரம்
புத்தளம் சேனாதிலக்க ரெஸ்ரூரண்ட் கேட்போர் கூடத்தில்
நடைபெற்றது. இக்கருத்தரங்கில் வனவாளராக கலந்து கொண்ட
சகவாழ்வு மன்ற மொழித்திட்டமிடல் இணைப்பாளர்
எம்.முத்துக்குமார் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;,
இந்த நாட்டில் மொழிவாதம் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக
இணக்கம் காண முடியாத இரு கூறுகளாக பிளவுபட்டிருப்பதோடு, அது
நாட்டின் வளர்ச்சியையும் மிக மோசமாக பாதித்துள்ளது.
இலங்கையில