 |
|
| |
|
|
| |
Article Contents |
|
| |
| | | அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கரங்களைப் பலப்படுத்த யாழ் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தீர்மானம்! |
| | | 30.06.2009 செவ்வாக்கிழமை
மீண்டும், மீண்டும் அரசுடன் மோதல்களைத் தொடரும்
திட்டத்துடனேயே புலிகளின் தலைமை ஏற்றுக் கொள்ள இயலாத நிபந்தனைகளை அரசாங்கத்தின்
முன் வைத்து வந்தது என்றும் புலித்தலைமையின் இவ்வாறான செயற்hடுகளின் விளைவாகவே
தமிழ்பேசும் மக்கள் இன்று தீராத அவல நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர் என்றும் ஈழமக்கள்
ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை
அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட
வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் இன்று (30) மாலை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில்
ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே
அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்படி கூட்டத்தில்
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வருமானமொன்றைப்
பெற்றுக் கொள்ள இயலாத நிலையில் இப்பட்டதாரிகள் முகங்கொடுத்து வருகின்ற பல்வேறு
துன்ப துயரங்களை உணர்வுப் பூர்வமாக தான் அறிவதாகவும் எதிர்வரும் ஆறு மாதக்
காலத்தில் வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்குத் தன்னால் படிப்படியாகத்
தீர்வு காண இயலும் என்றும் தெரிவித்தார்.
இன்றைய சூழலில் நம் முன்புள்ள
அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க தான் குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை
நடைமுறைப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், யாழ்
நகரத்தை மட்டுமல்லாது யாழ் குடாநாடு முழுவதையும் வளமான பூமியாக மாற்றக் கூடிய
வாய்ப்பு எம் முன்பு உள்ளதாகவும் இது எமது மக்களுக்குக் கிடைத்துள்ள பொன்னான
வாய்ப்பு என்பதை எமது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எதிர்வரும் யாழ் மாநகர சபைத் தேர்தல் குடாநாட்டு மக்கள் அனைவரதும்
பிரச்சினைகளுக்கானத் தீர்வின் முதற்படியாகும் என்பதால் இத்தேர்தல் மூலமான
வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக மக்கள் அனைவரும் மாற வேண்டும் எனக் கேட்டுக்
கொண்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், எமது
மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் கரங்களைப்
பலப்படுத்தினால் யுத்தம் காரணமாக அழிந்து போயிருக்கும எமது தேசத்தை இரண்டே
வருடங்களில் முழுமையாக மாற்றியமைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இறுதியில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர், தங்களது பிரச்சினைகள்
தொடர்பில் தொடர்ந்து அக்கறை கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கரங்களைப் பலப்படுத்துவதாக தீர்மானம்
மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
|
|
|
|
| |
|
|
|
|
|
|
|
|
|
|
Related Sites: Anandasangaree, Asiantribune, Athirady, Colombopage, Eeelanaasam, Engaltheaasam, Ilakku, PresidentSL, Tamilnewsweb, Thayagam, Theerppu, Thenee, Tirradio, Telonews |
| |
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax: 94 11 2585255 , 2596741 |
E-Mail: epdp@sltnet.lk
© 2008 www. epdpnews.com, All Rights Reserved. |
|
|
|
|
|
 |