HOME PAGE
ENGLISH
jkpo;
  WELCOME TO EPDPNEWS
www.epdpnews.com
      

HOME

NEWS

S.G's MESSAGE

OUR VISION

ARCHIVES

Kd;ida nra;jpfs;                    
  HISTORY HEROES PHOTOS PRESS RELEASES CONTACT US Kd;ida jsk;    

தனிமனிதப் படுகொலைகளினால் விடுதலையை
ஒரு போதும் வென்றெடுக்க முடியாது - 06.04.2008

Freedom couldn’t be achieved by homicide - 06.04.2008

 

நான் அங்கம் வகிக்கின்ற அரசாங்கத்தில் சக அமைச்சராகவும், இனியதொரு நண்பராகவும் இருந்து வந்த அமைச்சர் nஐயராஐ; பெர்னாண்டோ பிள்ளை அவர்களின் இழப்பு செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இவ்வாறு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோப்புள்ளே அவர்களின் மறைவையடுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆற்றல் மிகுந்த ஒரு அரசியல் தலைவரின் இழப்பினால் துடிதுடித்துப் போயிருக்கும் மக்களின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம்.

எமது அரசியல் கோரிக்கைகளை நாம் முன்மொழிந்த வேளைகளில் பல்வேறு நடைமுறைப்பிரச்சினைகள் எழுந்த போது நான் பல தடவைகள் அவரோடு முரண்பட்டுக்கொண்ட வரலாறுகளும் உண்டு! அதேவேளையில் அவரோடு உடன் பட்டுக்கொண்ட வரலாறுகளும் உண்டு!

எமது மக்களை அவலங்களுக்குள் இருந்து மீட்பதற்காக நாம் முன்மொழிந்த அரசியல் தீர்வின் முதற்கட்டமான 13 வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக செற்பட்டு எம்மோடு அரசியல் உடன்பாடு கொண்டிருந்த அமைச்சர் ஒருவரை நாம் இன்று இழந்திருக்கின்றோம்.

மும்மொழியும் அறிந்தவராக, எம் தாய் மொழியான தமிழ் மொழியையும் பேச முடிந்தவராக, அனைத்து இன மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையிலான ஒரு உறவுப்பாலமாக இருந்த வல்லமை படைத்த மக்கள் பிரதிநிதியை நாம் இழந்திருக்கின்றோம்.


தனிமனிதர்களை படுகொலை செய்வதனால் எவராலும் எந்த இலக்கையும் எட்டிவிட முடியாது. மாற்றுக் கருத்துக்களை கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களை கொன்றொழிப்பதன் மூலம் அவர்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை யாராலும் அழித்து விட முடியாது.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் வரலாறெங்கும் நடத்தப்பட்டு வருகின்ற இப்படுகொலை கலாச்சாரம் என்பது இன்று வரை முடிவற்று தொடர்வதற்கான காரணம் என்பது இது ஒரு வெல்லப்பட முடியாத நடவடிக்கை என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.


இது போன்ற அரசியல் படுகொலைகளினால் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு முயற்சிகளை பின்தள்ளிப் போடுவதற்கான கைங்கரியத்தில் மட்டும்தான் புலித்தலைமை ஈடுபட்டு வருகின்றது.

இன விடுதலையின் பெயரால் நடத்தப்படும் இது போன்ற இலக்கற்ற நடவடிக்கைகளை ஈ.பி.டி.பி எப்பொழுதும் கண்டித்தே வந்திருக்கின்றது. அது மட்டுமன்றி மனிதப் படுகொலைகளை யார் புரிந்தாலும் அதை நாம் ஒரு போதும் ஏற்றுக் கௌ;ளப்போதில்லை.

தனிமனித உயிர்களை கொன்றொழித்து விட்டு அதற்கான நியாயங்களை கற்பிப்பதும், அதை வைத்து அரசியல் ஆதாயமும், ஆதரவும் தேடும் புலித்தலைமையின் இயலாத்தன்மையும் இன்று எமது மக்களால் புரிந்து கொள்ளப்பட்ட விடயங்களில் பிரதானமான ஒன்றாகும்.

அமைச்சர் nஐயராஐ; பெர்னாண்டோ பிள்ளை போன்ற அரசியல் தலைவர்களை கொன்றொழிப்பன் மூலம் புலித்தலைமையால் தமிழ் பேசும் மக்களுக்கான விடுதலையை பெற்றுக்கொடுக்க முடியுhது என்பதை சகல தரப்பினரும் இன்று உணர்ந்திருக்கின்றார்கள்.

இந்த படுகொலையை புரிந்ததன் மூலம் புலித்தலைமை தமக்கான படுகுழியை தாமே இன்னமும் ஆழமாக தோண்டியுள்ளது.

அமைச்சர் அவர்களின் இழப்பினால் துயரப்படுகின்ற அவரது உறவுகள், குடும்பத்தினர், அவரது அரசியல் நண்பர்கள், அவரது கட்சியின் உறுப்பினர்கள், மற்றும் அவரை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுத்த கம்பஹா மாவட்ட மக்கள் அனைவரோடும் இணைந்து நாமும் இந்த துயரத்தில் பங்கெடுக்கின்றோம். எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

The immature demise of a sweet friend and co- minister Jeyaraj Fernandopulle has shattered me, said EPDP Secretary General and Minister Douglas Devananda in his condolence message over the cowardly assassination of Jeyaraj Fernandopulle, Minister of High Ways and Road Construction.

 

The sudden demise of Minister Fernandopulle is an irreparable loss to the country and its people, whose grief I share with them.

 

Hw was forthright in expressing his views and was a good debater in the Parliament.

The LTTE infuriated over the defeats in the battlefield engage in this type of assassinations to paralyze the government’s effort to eradicate terrorism from the country and especially to paralyze the development activities in the north and east.

 

The assassination of such a committed democrat once again shows the total contempt of the LTTE to the democratic process and its unquestioned commitment to violence and terror to achieve it narrow objectives that are far removed from the Tamil people of this country.

 

It is also significant that in carrying this repeated act of terrorist brutality the LTTE has chosen as its target a leader who played an important role in bringing about greater understanding among the different communities of our country.

 

EPDP vehemently denounce this type of assassinations in the guise of liberation for our country. The LTTE could never achieve freedom from for Tamils by killing political leaders like Fernandopulle.

 

We share the bereavement of Fernandopulle’s kith and kin, his party members, Gampaha people who elected him to represent them in Parliament, he said further.

  

Related Sites : | www.uthr.org | www.tirradio.com | www.ilakku.com | www.asiantribune.com |

| www.thenee.com | www.mypage.bluewin.ch/pookoolam | www.tamil.com | www.tulf.org | www.lankamuslims.org |

| www.uthayam.net | www.athirady.com | www.epdp.com | www.plote.org | www.asiantruth.com | www.thayagam.info |

121, Park Road, Colombo - 05, Sri Lanka. Tel: 94 11 2551015, 2593515

Fax:  94 11 2585255 , 2596741

E-Mail: epdp@sltnet.lk 

© 2004/2005 www. epdpnews.com, All Rights Reserved.

web master :  raman1@sltnet.lk