 |
 |
|
WELCOME TO EPDPNEWS www.epdpnews.com | |
 |
|
|
|
வடக்கு மக்களுக்கான சிறப்பு நிர்வாகத்தின்
தலைவர்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில்
யாழ் மாவட்ட அபிவிருத்தி மற்றும் மக்கள் நலப்பணிகள் குறித்த
விஷேட கூட்டம்!
07.05.2008 |
|
வடக்கு மக்களுக்கான சிறப்பு நிர்வாகத்தின்
தேச வாழ்வியல் உரிமைகளுக்கான பணியின் கீழ் யாழ்
மாவட்டத்திற்கான அபிவிருத்தி மற்றும் செயற்திட்டங்களை
முன்னெடுப்பதற்கான விஷேட கூட்டம் ஒன்று அதன் தலைவர் அமைச்சர்
டக்ளஸ் தேவாந்தா அவர்கள் தலைமையில் இடம் பெற்றுள்ளது.


வடக்கு மக்களுக்கான சிறப்பு நிர்வாகத்தின்
தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில்
சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு பணிமனையில்
இடம்பெற்ற இவ்விஷேட கூட்டத்தில் சமூக சேவைகள் அமைச்சின்
செயலாளர் திருமதி வீ.ஜெகராஜசிங்கம், தேச நிர்மாண மற்றும்
பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர்
டபிள்யு.கே.கே.குமாரசிறி, மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த
முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம்.ராசீக. வீடமைப்பு
மற்றும் பொது வசதிகள் அமைச்சின் செயலாளர் டபிள்யு.பி.கணேகல,
அனர்த்த முகாமைத்துவ வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சின் மேலதிக
செலாளர் யு.என்.றொட்றிகோ, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி
அதிகார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் கே.கெட்டபேராட்சி,
தேச நிர்மாண மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின்
பிரதான கணக்காளர் திருமதி எஸ்.ஏ.கே.ஆரியரட்ண, தேச நிர்மான
அமைச்சின் கணக்காளர் கே.நவரட்ணம் ஆகியோருடன் யாழ் அரசாங்க
அதிபர் கே.கணேஷ் ஆகியோர் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து தமிழ் பேசும் மக்களினதும் அரசியல்
மற்றும் வாழ்வியல் உரிமைகளுக்காக நடைமுறைச்சாத்தியமான வழியில்
நின்று உழைத்து வரும் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர்
டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிகளின் ஒரு கட்டமாகவே
இக்கூட்டத்தின் தீர்மானங்கள் இயற்றப்பட்டிருந்தன. 07. 05.
2008 இல் நிகழ்ந்த இந்த விஷேட கூட்டத்தில் அமைச்சுகள்
சார்ந்த செயலாளர்கள் மற்றும் அரச உயரதிகாரிகள் யாழ் அரசாங்க
அதிபர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், மாவட்ட அபிவிருத்தி
மற்றும் மக்கள் நலப்பணிகள் குறித்த பல்வேறு விடயங்கள்
ஆராயப்பட்டு, அதற்குரிய தீர்மானங்களும் நிதி ஒதுக்கீடுகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கூட்டத்தில்
இயற்றப்பட்டு நடைமுறைக்கு வர இருக்கும் தீர்மானங்கள்.
அவலப்படும் எமது மக்களுக்கான நாவற்குழி வீடமைப்புத்திட்டம்.
(மேலும்)
நிரந்தர வாழ்வியல் மகிழ்ச்சிக்கான நிரந்தர நியமனங்கள்!
(மேலும்)
தேசத்தை நிர்மாணிக்கும் துரித அபிவிருத்தி!
(மேலும்)
வறுமையின் எல்லைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் துயர்
துடைக்க சமுர்த்தி நிவாரணத்திட்டம்!
(மேலும்)
இல்லை என்பதை இல்லாமல் ஒழிக்கும் முன்னேற்பாட்டு திட்டமாக
உணவுக்கையிருப்பு!
(மேலும்)
|
 |
|
|
| |
|
| |
 |
|
Related Sites:
Anandasangaree,
Asiantribune,
Athirady,
Colombopage,
Eeelanaasam,
Engaltheaasam,
Ilakku,
PresidentSL,
Tamilalai,
Tamilnewsweb,
Thayagam,
Theerppu,
Thenee,
Tirradio, Vizhippu
Political Parties:
EPRLF,
PLOTE,
TULF,
JVP
121, Park Road, Colombo - 05, Sri Lanka. Tel: 94
11 2551015, 2593515
Fax: 94 11 2585255 , 2596741
E-Mail:
epdp@sltnet.lk
© 2004/2005 www. epdpnews.com, All Rights Reserved.
web master : raman1@sltnet.lk
|
|
|
 |
|
|
|